Friday, January 29, 2010

கோவா விமர்சனம்


கோவா விமர்சனம்
இது எனது முதல் போஸ்ட் மட்டுமல்ல முதல் சினிமா விமர்சனமும் கூட.
ஜனவரி 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு ஒரு சூழ்நிலைல இங்கு UAEல ஒரு நாள் முன்னாடியே வந்துடுச்சு துபை கலேரியா சினிமா பக்கம் படம் வந்துடுச்சான்னு பக்கலாமுனு தியேட்டர் பக்கம் போனேன். அங்க பாத்தா மலையாள சினிமாவ screen 1ல போட்டுட்டு கோவாவ screen 2 ல போட்டுட்டாங்க சரி எப்படியோ படம் வந்திடுச்சு இந்த ஹோம் தியேட்டர்ல பார்க்கிறதவிட சார்ஜா போய் பார்க்கலாமுன்னு வண்டிய சார்ஜாக்கு விட்டேன். அங்க போய் பார்த்தா 7.30 க்கு ஒரு show மட்டும் போர்டு வச்சிருந்தாங்க என்னடா தமிழுக்கு வந்த சோதனை நினைச்சுக்குட்டு டிக்கட்டை வாங்கிட்டு உள்ளே போனால் டைட்டில் சாங்க் ஏழேழு தலமுறைக்கும் ஓடிட்டுருக்கு உள்ள 30 பேருகூட இல்ல ஆஹா என்னடா இதுன்னு படத்த பார்க்க ஆரம்பித்தேன்.



கதை என்னன்னா ஏற்கனவே வெங்கட் பிரபு சொன்ன மாதிரி கிராமத்திலேர்ந்து 3 நண்பர்கள் வெளிநாடு போகறதுக்காக கோவால போய் வெள்ளக்காரிங்கள கரெக்ட் பண்றதும் அங்க அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்தான் கதை ஆனா அதை வெங்கட் பிரபு சொன்னவிதம்தான். எப்படி மனசுவந்து ஒரு ஹோமோசெக்ஸ் படத்தை எடுக்க சம்மதித்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் மகள் என்னால் நம்பவேமுடியல.தமிழ்ல இதுவரை இப்படி படங்கள் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆபாச வசனம் காட்சிகள்.

இப்படிலாம் எடுத்தாதான் இளைஞர்கள் படம் பார்க்க வருவாங்கன்னு டைரக்டர் நினைச்சுட்டார் போல இப்படி ஒரு படத்தை வெங்கட்பிரபுவிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.




படத்தில் பிடித்த சில விஷயங்கள் :

1 . ஆங்காங்கே வரும் பிரபலமான BGM முக்கியம அந்த சின்னவீடு நகிர்தனாவும் கண்கள் இரண்டாலும் இதுல்லாம் பிரேம்ஜி வேலைன்னு நினைக்கிறேன் டைட்டில்ல அவர் பேரும் வருது(பி.இசை உதவின்னு)

2 . நாம் ஏற்கனவே பார்த்த படங்களை நக்கலடித்து செய்திருக்கும் காமெடி விஜயகுமார்,சந்திரசேகர், கரகாட்டக்காரன் கனகா அப்பாவா வருவாரே(பெயர் தெரியவில்லை) சீரியசாக நடிக்கவைத்து காமெடி செய்திருப்பது.

3. கிளைமாக்சில் வைத்திருக்கும் ட்விஸ்ட்.

4.யுவன் ஷங்கர் ராஜா . பாடல்கள் அனைத்துமே நல்லாருக்கு. இளையராஜாவும் , எஸ் பி பியும் பாடிய "வாலிபா வா வா " பாடலோட situation தெரிந்து இளையராஜா எப்படித்தான் பாட சம்மதிச்சாரோ?.
5. சர்ப்ரைஸாக வரும் அந்த மூன்று பிரபலங்கள்.

படத்தில் பிடிக்காத அல்லது சகிக்காத விஷயங்கள் :


1.சம்பத்துக்கும் அரவிந்த்தும் சம்பத்தப்பட்ட காமநெடிவீசும்காட்சிகள். அதிலும் சம்பத்தும் பிரேம்ஜியும் ரூமில் பேசுவதை அரவிந்த் வெளியிலிருந்து கேட்கும் காட்சி ரொம்ப மோசம்.

2.சினேஹா சம்பந்தபட்ட 90% காட்சிகள் செம்மபோர்.

மொத்தத்தில் (சௌந்தர்யா) ரஜினிகாந்தின் காசில் ஹாலிடே கொண்டாடிய வெங்கட் பிரபு தனது ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.